ஈரான் போர்ச் சூழல்: விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறை குறித்து வெளியான அறிவிப்பு
ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்னும் கடுமையான நிலையை எட்டவில்லை என்பதால், விமானப் பயணிகளுக்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் விதிமுறைகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டால் மட்டுமே பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு
மேலும், எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி பயணிகளிடம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டணத்தைத் தாண்டி கூடுதல் கட்டணங்களையோ அல்லது எரிபொருள் கூடுதல் கட்டணங்களையோ பின்னோக்கி வசூலிக்க அனுமதி இல்லை என்றும் ஐரோப்பிய ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

போர்க்காலச் சூழலைப் பயன்படுத்தி பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam