ஹோர்முஸ் நீரிணை அருகே சரக்குக் கப்பல் மீது தாக்குதல் : அமெரிக்க விடுத்துள்ள எச்சரிக்கை
மூன்றாவது சரக்குக் கப்பல் ஒன்று “அறியப்படாத எறிபொருளால்” தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) தெரிவித்துள்ளது.
துபாயிலிருந்து வடமேற்கே சுமார் 93 கிலோமீட்டர் (50 கடல் மைல்) தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், இது GMT நேரப்படி அதிகாலை 02:05 மணியளவில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
தாக்குதலுக்குப் பின்னர் கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் “பாதுகாப்பாகவும் நலமாகவும்” இருப்பதாகவும், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்பாக, ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு இன்று (11) முன்னதாக UAE கடற்கரைக்கு அருகில் ஒரு கப்பல் தாக்கப்பட்டதாகவும், ஓமானின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் மற்றொரு கப்பல் வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.