ஈரான் போரினால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மை
ஈரானில் இடம்பெற்று வரும் போரினால் இலங்கைக்கு சில சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெறுவதாக ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி அமைச்சர் நளின் ஹேவகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலகில் இடம்பெற்று வரும் பாரிய போரினால் ஏற்படக் கூடிய அழிவுகளை மீளக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பங்கள் தொடர்பில் தற்பொழுதிலிருந்தே கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

போரின் பின்னர் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளில் இலங்கைப் பணியாளர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அராசங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவோருக்கு வீசேட வேலை திட்டமொன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் இராணுவத்திலிருந்து 6000 பேர் வரையில் ஓய்வு பெற்றுக் கொள்வதாகவும் இவர்களின் சராசரி வயது 42 எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறானர்களினால் தொடர்ந்தும் பணிகளில் ஈடுபடக்கூடிய திறன் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுக்கொள்வோரை இலக்கு வைத்து விசேட தொழிற்தகமை சான்றிதழ் கற்கை நெறிகள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளின் ஹெவகே குறிப்பிட்டுள்ளார்.