இஸ்ரேலின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கும் ஐ.நா
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுத் தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் அமை்பின் நிபுணர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 2-ஆம் திகதி முதல் ஹிஸ்புல்லா அமைப்புடன் மீண்டும் இஸ்ரேல் போர் புரிந்து வருகின்றது.
ஏப்ரல் 8-ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய மிக மோசமான தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிபுணர்கள் குழு, இவை தற்காப்பு நடவடிக்கைகள் அல்ல; மாறாக ஐநா சாசனத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளனர்.
இது அமைதிக்கான வாய்ப்புகளைத் திட்டமிட்டு சீர்குலைப்பதோடு, சர்வதேச கொள்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பினை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam