லெபனான் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும்: இஸ்ரேலிய இராணுவத் தளபதி
லெபனான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஐயல் ஜமீர் (Eyal Zamir) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்து ஈரானைத் தாக்கியதன் மூலம், அந்த நாட்டின் தற்காப்புத் திறனைப் பறித்து பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி விவகாரம், ஹார்முஸ் நீரிணை மற்றும் பிற முக்கிய விவகாரங்களில் அவர்கள் எவ்வித சாதகமான முடிவுகளையும் எட்ட தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

உடனடி மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் மூலம் அவர்களை நிலைகுலையச் செய்ய தமக்குத் தெரியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்வதாகக் குறிப்பிட்ட ஜமீர், அங்குள்ள முக்கிய இடங்களைக் கைப்பற்றி அழிப்பதன் மூலம் வடக்கு இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை அகற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan