வளைகுடா நாடுகளுக்கு ஐரோப்பா ஆதரவு
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலையில், வளைகுடா நாடுகளுக்கு தனது ஆதரவை ஐரோப்பிய ஆணைக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய பேரவையின் தலைவர் அன்டோனியோ கொஸ்டா இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பொதுமக்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைப்பதாக கொஸ்டா எக்ஸ் தளத்தில் குற்றம் சுமத்தி பதிவிட்டுள்ளார்.

இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒற்றுமையாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னர் சேக் மொஹமட் பின் ஸயட் அல் நாயானுடனான தெலைபேசி உரையாடலின் பின்னர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உரையாடலிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான ஆதரவு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், “மத்திய கிழக்கில் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் உறுதியாக இருக்க, அனைத்து தரப்பும் பதற்றத்தை குறைத்து, தூதரக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என் கொஸ்டா குறிப்பிட்டுள்ளார்.