ஈரான் போர் எதிரொலி: எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஆசியான் நாடுகள் பிலிப்பைன்ஸில் ஒன்றிணைவு
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் எரிசக்தி விலையேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்திற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' (ASEAN) தலைவர்கள் பிலிப்பைன்ஸில் இன்று (08.5.2026) கூடியுள்ளனர்.
இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பேசிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், ஈரான் போரினால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இது பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.
எரிசக்தி நெருக்கடி
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளது.
இந்த நெருக்கடியைத் தீர்க்க எரிசக்தி பகிர்வு ஒப்பந்தம் மற்றும் பிராந்திய மின்சார விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்க உறுப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

மேலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆசியான் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட உள்ளது.
எரிசக்தி பற்றாக்குறை காரணமாக இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் ஏற்கனவே பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam