பேச்சுவார்த்தை நடக்காது! ஜெனீவா சென்ற ஈரானின் வெளிவிவகார அமைச்சரின் முடிவு
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, அமெரிக்காவுடனான மிக முக்கியமான இரண்டாம் கட்ட அணுசக்திப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையானது, பிராந்திய மோதலைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தை நடக்காது!
இதனைத் தொடர்ந்து,"நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் வந்துள்ளேன். ஆனால், அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்" என அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக, சர்வதேச அணுசக்தி முகாமை (IAEA) தலைவர் ரஃபேல் குரோசியைச் சந்தித்த அரக்ச்சி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
கதிர்வீச்சு அபாயம்
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் குண்டுவீசித் தாக்கப்பட்ட ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்குள் நுழைந்து ஆய்வு செய்ய IAEA அனுமதி கோரி வருகிறது.
இருப்பினும், தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதால், முறையான நெறிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரே ஆய்வுக்கு அனுமதிக்க முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நல்லது எனக் கருத்துத் தெரிவித்துள்ளதோடு, பிராந்தியத்திற்கு இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலையும் அனுப்பி இராணுவ பலத்தை அதிகரித்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர இராணுவப் படை (IRGC) உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தீவிரமான கடற்படைப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.
ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரானின் நாடாளுமன்றத்தில் உள்ள கடும்போக்குவாதிகள், அமெரிக்காவிடம் எந்தவொரு விட்டுக்கொடுப்புகளையும் செய்யக்கூடாது என அரசை எச்சரித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்துப் பேசவே கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஜெனீவாவில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளும் ஜெனீவாவில் நாளை நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam