அமெரிக்காவுக்கு பணிய மாட்டோம்! ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த ஈரான்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா முன்வைத்த சமாதானத் திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 5 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் உயர்மட்ட அரசியல்-பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்தச் செய்தியில், அமெரிக்காவின் எந்தவொரு நிபந்தனைக்கும் ஈரான் பணியாது என்பது தெளிவாகியுள்ளது.
"ஈரான் எப்போது போரை முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறதோ, எப்போது தனது சொந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படுகிறதோ, அப்போதுதான் போர் முடிவுக்கு வரும்" என்று அந்த அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நிபந்தனைகள்..
இந்நிலையில் ஈரான் ஐந்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளது,
படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி: ஈரான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் ஈரானிய முக்கியப் பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் படுகொலைகள் (Assassinations) முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.

மீண்டும் போர் ஏற்படாத உறுதிமொழி: எதிர்காலத்தில் ஈரான் மீது மீண்டும் போர் திணிக்கப்படாது என்பதை உறுதி செய்யத் தகுந்த பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
போர் இழப்பீடு: போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட மற்றும் தெளிவான முறையில் போர் இழப்பீடுகள் (Reparations) வழங்கப்பட வேண்டும்.
அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம்: ஈரான் ஆதரவு குழுக்கள் உட்பட பிராந்தியம் முழுவதிலும் உள்ள அனைத்து முனைகளிலும் மோதல்கள் முற்றாக முடிவுக்கு வர வேண்டும்.
ஹோர்முஸ் நீரிணை மீதான அதிகாரம்: சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வகையில், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீதான ஈரானின் இறையாண்மை மற்றும் அதிகாரத்திற்கு சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
அத்துடன், பல்வேறு தூதரக வழிகள் ஊடாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வரும் போதிலும், வாஷிங்டனின் முன்மொழிவுகள் "அத்துமீறியவை" (Excessive) மற்றும் போதுமானதாக இல்லை என ஈரான் கருதுகிறது. தற்காலிக போர் நிறுத்தத்தை விட, போருக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதையே ஈரான் இலக்காகக் கொண்டுள்ளது.
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam