அமெரிக்காவின் நிபந்தனைக்கு ஈரான் மறுப்பு: யுரேனியத்தை ஒப்படைக்க முடியாது எனத் திட்டவட்டம்
அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளின்படி ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோரினால், இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி கூறுகையில், ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான விபரங்களுக்குள் அமெரிக்கா நுழைய முயன்றால் இந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் நாட்டின் தூதுக்குழு ஒன்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் (Abbas Araghchi) தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் தொடர்ந்து முக்கிய மத்தியஸ்தராக (mediator) செயல்பட்டு வருவதாகவும் ஈரான் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA மூலம் பகாஹி மேலும் விளக்கியுள்ளார்.
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri