அமெரிக்காவின் 48 மணி நேர போர்நிறுத்த முன்மொழிவு! அதிரடியாக நிராகரித்த ஈரான்
அமெரிக்கா முன்வைத்த 48 மணி நேர போர்நிறுத்த முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் அரை-அதிகாரப்பூர்வமான Fars செய்தி நிறுவனம் இதை அறிவித்துள்ளது.
48 மணி நேர போர்நிறுத்தம்
பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நாட்டின் மூலம் புதன்கிழமை அன்று இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாக அந்த ஆதாரம் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 2ஆம் திகதி, அமெரிக்கா நட்பு நாடுகளில் ஒன்றின் மூலம் 48 மணி நேர போர்நிறுத்தத்தை முன்மொழிந்தது, என அந்த அறிக்கையில் ஒரு தகவல் ஆதாரம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அந்த முன்மொழிவு, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை மற்றும் அமெரிக்க படைகள் எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாக முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் எழுத்து மூலம் பதில் அளிக்கவில்லை அதற்கு பதிலாக, நிலத்தில் கடுமையான தாக்குதல்களைத் தொடர்வதன் மூலம் தனது பதிலை வெளிப்படுத்தியது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தோ அல்லது உறுதிப்படுத்தலோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்