இஸ்ரேலுக்கு எதிரான மூன்றாவது தாக்குதலை திட்டமிட்டுள்ள ஈரான்
கடந்த ஒக்டோபர் மாதம் தெஹ்ரான் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக மூன்றாவது பெரிய தாக்குதல் விரைவில் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான மூன்றாவது பெரிய தாக்குதலை பெரும்பாலான ஈரானியர்கள் ஆதரிப்பதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் (IRGC) மூத்த தளபதி வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டியே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் உளவுத்துறையின் துணைத் தலைவரான பிரிகேடியர் ஜெனரல் மெஹ்தி சயாரி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
அதிகாரப்பூர்வ நிகழ்வு
“முன்னதாக காஸாவில் நடந்த அதிகாரப்பூர்வ நிகழ்வில் பார்வையாளர்களிடம், நடத்திய கருத்துக் கணிப்பில் 65-68 சதவிகித ஈரானியர்கள் ஈரான் இஸ்ரேலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.
இதற்கான தயார்நிலையில் ஈரான் உள்ளது.
இஸ்ரேலும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் நேரடி மோதலைத் தொடர்வதற்குப் பதிலாக ஈரானை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த பாதுகாப்பு, இராணுவம் மற்றும் சைபர் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
மேலும், இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் மூன்றாவது தாக்குதல் தகுந்த நேரத்தில் தொடங்கப்படும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |