மொசாட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த ஈரானின் நடவடிக்கை
மொசாட் இந்தியர்களையும் ஆப்காணிஸ்தானியர்களையும் வைத்து புலனாய்வு தாக்குதல்களில் ஈடுபடுகின்ற அதேசமயம் ஈரான் ஒருபடி மேலே சென்று மொசாட்டினது சிசிரிவி கமெராக்களில் சைபர் தாக்குதல் நடத்தி அதன் மூலமாக புலனாய்வு தகவல்களை பெற்றுக் கொண்டார்கள் என இஸ்ரேல், அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஈரான் நாடு முழுவதும் வாட்ஸ்அப் பாவனையையும் இணையத் தொடர்பையும் முடக்கிவிட்டனர்.
இந்தநிலையில், இவ்வாறு இணைய வசதி நாடு முழுவதும் முடக்கப்படும் சூழலில் அங்குள்ள மொசாட்டினுடைய இணைய ஊடுருவல்களை ஈரானால் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
இந்த விடயத்தை ஈரானால் மட்டும் செய்திருக்க முடியாது எனவும் இதற்கு சீனா மற்றும் ரஷ்யா பக்கபலமாக இருந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா




