அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்
புதிய இணைப்பு
இரு நாடுகளின் பகிரப்பட்ட எல்லைக்கு அருகிலுள்ள அஜர்பைஜான் விமான நிலையத்தை ஈரானிய ட்ரோன் தாக்கியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து காகசஸில் உள்ள ஒரு மாநிலத்தை ஈரான் குறிவைப்பது இதுவே முதல் முறையாகும்.
ஈரான் எல்லையை ஒட்டியுள்ள அஜர்பைஜான் எக்ஸ்க்ளேவ் நக்சிவானில் உள்ள விமான நிலைய முனையக் கட்டிடத்தை ட்ரோன் தாக்கியதாகவும், வளாகத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை அருகே இரண்டாவது ட்ரோன் விழுந்தது என்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
ஈரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அஜர்பைஜான் விமான நிலையத்திற்கு அருகில் விழுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச விமானம்
இது தொடர்பில் சற்று முன்னர் வெளியான சர்வதேச அறிக்கைகளின் படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானிய திசையில் இருந்து பறக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் நக்சிவனின் அஜர்பைஜான் எக்ஸ்க்ளேவில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் விழுந்ததாக சர்வதேச செய்திகள் தெிரிவிக்கின்றன.
நக்சிவன் விமான நிலையம் ஈரானின் எல்லையிலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில் அமைந்துள்ளது.
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri