லெபனான் போர் நிறுத்தத்தை உறுதி செய்ய ஈரான் தீவிரம் - ஹிஸ்புல்லா ஆதரவு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், லெபனானில் போர் நிறுத்த கடப்பாடுகள் அனைத்து முனைகளிலும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய அந்நாட்டுடன் தொடர் தொடர்பில் இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம் பேசிய வெளி விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர், லெபனானில் நிலவும் சூழல் குறித்து தாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
முத்தரப்பு பேச்சுவார்த்தை
இதற்கிடையில், ஹிஸ்புல்லா அமைப்புடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் லெபனான் அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் முன்னெடுக்கும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஹிஸ்புல்லா தனது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் வொஷிங்டன் நகரில் நடைபெறவுள்ள தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை விட, தற்போது இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையே சரியான அணுகுமுறை என்றும் அந்த அமைப்பு கருதுகிறது.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri