வெடித்துச் சிதறிய IRIS Dena.. ஜனாதிபதி விட்ட தவறு.. சபையில் சஜித் பகிரங்க கேள்வி
ஈரானிய கப்பல் IRIS Dena மீது இலங்ககைக்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து இலங்கைக்கு தகவல் வழங்கப்பட்டதா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போர் சூழ்நிலையில் இடம்பெறும் சர்வதேச சட்ட மீறல்களை ஜனாதிபதி கண்டிக்கத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதி தாம் நடுநிலையாக செயல்பட்டதாக கூறியிருந்தாலும், ஐ.நா சாசனத்தின் 2.4 மற்றும் 2.7 பிரிவுகள் உள்ளிட்ட சர்வதேச ஒப்பந்த மீறல்களை அவர் கவனிக்காமல் விட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கவனயீனம்..
உண்மையான நடுநிலை நிலைப்பாடு என்றால், இத்தகைய மீறல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அவசியம் எனவும், சர்வதேச சட்டத்தை பாதுகாக்க ஒழுங்குமுறை செயல்முறை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடல்சார் ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகளையும் அவர் கடுமையாக செய்தார்.
ஈரான் கப்பல் IRIS Dena மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கைக்கு தகவல் வழங்கப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார்.
அதோடு, தனிப்பட்ட பொருளாதார மண்டலம் (EEZ) சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் அமைதியான நடவடிக்கைகளுக்கே அனுமதி வழங்குகிறது என்றும், அதற்கு மாறான செயல்பாடுகளை ஜனாதிபதி நியாயப்படுத்தியதாகவும் அவர் அதை நிராகரிப்பதாகவுமட தெரிவித்தார்.
எரிபொருள் கொள்முதல்
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் வாய்ப்பை அரசு தவறவிட்டதாகவும் சஜித் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க தடை 30 நாட்களுக்கு தளர்த்தப்பட்டிருந்தபோதும், வெளிவிவகார அமைச்சரிடம் ஆலோசனை வழங்கியிருந்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
ரஷ்ய தூதருடன் நடைபெற்ற சந்திப்பிலும் எரிபொருள் கொள்முதல் குறித்து பேசப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்பு QR குறியீட்டு எரிபொருள் முறையை விமர்சித்தவர்கள் தற்போது அதையே பயன்படுத்துகின்றனர், பொருளாதார மீட்பு தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடி புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.