ட்ரம்ப் கூறிய பொய்! திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்த ஈரான்
800ற்கும் மேற்பட்ட கைதிகளின் தூக்குத் தண்டனையை தாம் தலையீடு செய்து நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தக் கூற்றை “முழுமையாக பொய்யானது” என ஈரானின் நீதித்துறை அறிவித்துள்ளது.
திட்டவட்ட மறுப்பு
ஈரானின் தலைமை வழக்கறிஞர் மொஹம்மத் மொவாஹெதி, நீதித்துறையின் செய்தி நிறுவனம் மிசான் மூலம் வெளியிட்ட கருத்தில், “800 என்ற எண்ணிக்கை முற்றிலும் தவறானது.
அத்தகைய எண்ணிக்கை எப்போதும் பரிசீலிக்கப்பட்டதில்லை. நீதித்துறை எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், ஈரான் அரசு 800-க்கும் மேற்பட்ட தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததாக ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும், ஈரான் தலைமையை அவர் பாராட்டியதுடன், இந்த முடிவு அமெரிக்க இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பை குறைத்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
ட்ரம்ப் கூறிய பொய்
இந்த நிலைமை, ஈரானில் நாடு முழுவதும் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கடுமையான அடக்குமுறைகளின் பின்னணியில் உருவாகியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களின் தகவலின்படி, இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பத்தாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Human Rights Activists News Agency அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினர், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 5,002 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 26,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஈரான் அரசு 3,117 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறி, அவர்களில் பலர் “தீவிரவாதிகள்” என தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் எச்சரிக்கை
நீண்ட காலமாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு, செய்தி சேகரிப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சுயாதீனமாக இந்த தகவல்களை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அமைதியான போராட்டக்காரர்களைக் கொலை செய்வதும், பெருமளவிலான தூக்குத் தண்டனைகளும் அமெரிக்காவின் “சிவப்பு கோடுகளை” மீறும் செயலாகும் என ட்ரம்ப் முன்னர் எச்சரித்திருந்தார்.
அமெரிக்க விமான தாங்கி கப்பல் குழு உள்ளிட்ட கடற்படை படைகள் அந்தப் பிராந்தியத்துக்கு நகர்த்தப்பட்டிருந்த நிலையில், தூக்குத் தண்டனைகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் தகவல் தனது முடிவில் “பெரும் தாக்கத்தை” ஏற்படுத்தியதாகவும், அதனால் உடனடி இராணுவ நடவடிக்கையிலிருந்து பின்வாங்க முடிவு செய்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan