எம்மிடம் கெஞ்சுகிறார்கள்! காலம் கடந்து போவதற்குள் செயற்படுமாறு ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
காலம் கடந்து போவதற்குள் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும், ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாகவும் "விசித்திரமானவர்களாகவும்" இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு நம்மிடம் "கெஞ்சுகிறார்கள்".
மீண்டு வருவதற்கான வாய்ப்பு
இராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டு வருவதற்கான வாய்ப்பு துளியும் இல்லாத நிலையில், அவர்கள் அவ்வாறு செய்வதுதான் சரி.

ஆனாலும், அவர்கள் பகிரங்கமாக, "எங்கள் முன்மொழிவை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்று கூறுகிறார்கள்.
தவறு!!! காலம் கடந்து போவதற்குள், அவர்கள் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால், ஒருமுறை அது நடந்துவிட்டால், பின்வாங்குவதற்கு வழியே இல்லை, அது நல்லபடியாகவும் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.