இசையமைப்பாளர் இராஜின் இறுதி எச்சரிக்கை!
இசையமைப்பாளர் இராஜ் வீரரத்ன இந்த வாரம் கொழும்பில் உள்ள அவரது குடும்ப வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குழுவினருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் பதிவில், வீட்டின் மீது தாக்குதலை நடத்தியவர்கள், திருடிச் சென்ற பொருட்களை திருப்பித் தரவேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று இராஜ் கூறியுள்ளார்.
திருடப்பட்ட பொருட்களை திருப்பி கொடுத்தால் அவர்களுக்கு பண உதவி செய்யவும் தாம் தயார் என்று இராஜ் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களின் சிசிடிவி காட்சிகளை இராஜ் வெளியிட்டார்.
பொருட்களை திருப்பி கொடுத்தால் சிறைக்கு செல்லவேண்டியதில்லை என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் குடும்ப வீட்டுக்குள் புகுந்த குழுவினர் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக்காட்சிகள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் குழுவினர் வீட்டின் மீது கற்களை வீசுவதைக் காட்டுகின்றன.
அந்த குழுவினர் வீட்டில் இருந்த சில தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை அழித்ததுடன் பல பொருட்களையும் கொள்ளையடித்துள்ளதாக இராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
