ஐப்பசி 6ம் திகதி தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனம்! - இலங்கை அரச ஆசிரியர் சங்கம்
இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் 6ம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம் என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் இன்று(04) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இருளை நீக்கும் தலைமுறையை இருளில் தள்ளுவதற்கு எதிராக எதிர்வரும் 6ம் திகதி பாடசாலைகள் , ஆசிரியர் இல்லங்கள் மற்றும் ஏனைய இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடியை ஏற்றி ஆசிரியர் தினம் 'தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக' அனுஷ்டிக்கப்படும்.
ஆசிரியர் தினத்தன்று நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளின் தலைமையையும் ஒருமித்து சந்தித்து அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றிக் கலந்தாலோசித்து அது தொடர்பான விரைவான தீர்விற்குச் செல்வதாக ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய ஒற்றுமை அமைப்பு தீர்மானித்துள்ளது.
எனவே எமது நிலையை வெளிப்படுத்த இலங்கையில் ஆசிரியர் தினமான 6ம் திகதியான அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
