தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் நீதிமன்றத்திற்கு அழைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசனை இன்று(16) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலாலி பொலிஸரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கச் சென்ற வேளை, இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு சமூகமளிக்குமாறு நீதிமன்றத்திற்கு அழைத்ததாகவும் தீபன் திலீசன் குறிப்பிட்டுள்ளார்.
நீதியான விசாரணை
கடந்த வருடம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியும் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பொலிஸாரால் கொழும்புக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மனித உரிமை ஆணைக்குழுவும் அரசாங்கத்துடன் சேர்ந்து பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், இது தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இதன்போதும் தீபன் திலீசன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
