யாழ். மறைமாவட்டம் விடுத்துள்ள அழைப்பு
ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள் என யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு குரு முதல்வர் கிறிஸ்தவ மக்களை கேட்டுள்ளார்.

மேலும், பொருத்தமற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து, பாலன் இயேசு கொண்டு வந்த அமைதி விடுதலை ஆகிய நற்செய்திகளை மக்களுக்கு அறிவித்து, துன்புறும் மக்களோடு ஒன்றிணைந்த உள்ளங்களோடு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுமாறு குரு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri