கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு மாவட்ட நீதவான் கள விஜயம்(Photos)
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பிலான நீதிமன்ற உத்தரவிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் கடந்த 08ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்றைய தினம்(10.08.2023) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினரும் நீதிபதியுடன் இணைந்து கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கள விஜயத்தின் பின்னர் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
“முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று மனித புதைகுழி வழக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை போன்று சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அழைக்கப்பட்ட தாெல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளார்கள்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் வாசுதேவனும், வேறு நிறுவனமும் பிரசன்னமாகியிருந்தனர்.
நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும்
இந்த விடயம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான பாதீடும், திட்டமும் ஒரு கிழமைக்குள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

எனினும் அவர்கள் இந்தமாதம் 17ஆம் திகதி அதற்கான திட்டங்களை தாக்கல் செய்யவுள்ளனர். அதனை தொடர்ந்து 21ஆம் திகதி அகழ்வு பணிகள் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும், குறித்த வழக்கு தொடர்பில் இந்த மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும்.” என தெரிவித்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam