பிணையில் வந்த சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்
மீண்டும் விளக்கமறியல்
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு, இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்ட போதிலும், ஒரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாமர சம்பத்திற்கு பிணை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த நீதவான்,சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபா சரீரப் பிணை இரண்டிலும் ரூ.50,000 அபராதமும் விதித்து பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சில நிமிடங்களுக்கு முன்பு, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
