சுரேஸ் சாலேக்கும் சிஐடியினருக்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை: ரவி செனவிரட்ண
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
டிஎன்எல் தொலைக்காட்சிக்கு நேற்றையதினம் (19.09.2023) வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அமைப்புகள் மற்றும் புலனாய்வு முகவர்களின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு தலைமை வகித்த சஹ்ரான் ஹாசிமை கட்டுப்படுத்திய மற்றுமொரு நபர் காணப்பட்டார். அந்த நபர் மிகவும் புத்திசாலி - இலங்கையில் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது.
விடுதலைப்புலிகள் கூட அதனை செய்யவில்லை.
சஹ்ரான் ஹாசிம் முறையான கல்வியறிவற்ற ஒருவர் அவருக்கு அவ்வாறான ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்வதற்கான திறமையிருந்திருக்காது. அவருக்கு மேல் அவரை கட்டுப்படுத்தக்கூடிய யாரோ இருக்க வேண்டும்.
இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்: துப்பாக்கி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி
அரச மற்றும் இராணுவபுலனாய்வு பிரிவினர்களிற்கு சஹ்ரான் ஹாசிமை தெரிந்திருந்தது. அவர்கள் அவருடன் இணைந்தும் செயற்பட்டுள்ளனர்.
தாக்குதலிற்கு முன்னரும் தாக்குதலின் போதும் அதன் பின்னரும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் எனவும் சிஐடியின் முன்னாள் தலைமை அதிகாரி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிஐடிக்கு பெரும் சந்தேகம்
வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களே காரணம் என்ற கருத்தினை உருவாக்குவதற்கு புலனாய்வு பிரிவினர் கடுமையாக முயற்சித்தனர்.
சிங்கள பகுதிக்குள் பிரவேசித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் : பொலிஸாருக்கு ஆளுநர் செந்தில் விடுத்துள்ள பணிப்புரை
அவர்கள் சில ஆதாரங்களை திட்டமிட்டு உருவாக்கினார்கள். இது குறித்து சிஐடிக்கு பெரும் சந்தேகம் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறிவதற்கான விசாரணைகளை தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரி பண்டார முன்னெடுத்தார்.
எனினும் இந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. அமைப்பிடமிருந்து சஹ்ரானிற்கு உதவிகள் கிடைத்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.
தேசிய புலனாய்வு பிரிவின் தற்போதைய தலைவர் சுரேஸ் சாலேக்கும் சிஐடியினருக்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை. சனல் 4 இன் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.