சிறுத்தை ஒன்றின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை
மாத்தளையில் சிறுத்தை ஒன்றின் கொலையில் மூன்றாம் தரப்பின் தொடர்பு குறித்து வனவிலங்கு பாதுகாப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
மாத்தளை- ஓவாலா பகுதியில் உள்ள ஒரு தானியங்கி மின் நிலையத்தின் தொட்டியில் இருந்து இறந்தநிலையில் சிறுத்தை ஒன்று உடலமாக மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் இந்த சிறுத்தையின் உடலில் விஷம் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.சி.டி.வி காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக வனவிலங்கு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட மின்சார நிலையத்தின் இரண்டு ஊழியர்கள் உட்பட நான்கு பேர் நிபந்தனை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை கடந்த ஒரு வருடத்திற்குள் மாத்தளை மாவட்டத்தில் கொல்லப்பட்ட இரண்டாவது சிறுத்தை இதுவாகும்.
இதற்கிடையில் இந்த சிறுத்தை அதன் தோல் மற்றும் பற்களுக்காக கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.