உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை முழுமைப்படுத்தப்படவில்லை! - சட்டமா அதிபர்
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் விசாரணைகள் மற்றும் தகவல்கள் முழுமைப்படுத்தப்படவில்லை என்று சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா காவல்துறை அதிபருக்கு தெரிவித்துள்ளார்.
எனவே 2019,ஏப்ரல் 21 அன்று நடந்த தாக்குதல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் காவல்துறை அதிபர் சி. டி. விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கையை தாமதமின்றி சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக அறிக்கைகள் மற்றும் சாட்சிகளைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபர் காவல்துறை அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் தமது ஆலோசனையைப் பின்பற்றி அனைத்து பரிந்துரைகளையும் 14 நாட்களுக்குள் தமக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா காவல்துறை அதிபரை வலியுறுத்தியுள்ளார்.



