அரசிற்கு எதிரான தமிழர்களின் போராட்டங்களுக்கு ஈ.பீ.ஆர்.எல்.எப் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்வு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னெடுக்கின்ற சகல போராட்டங்களுக்கும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டதாக மன்னார் நகரசபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) மன்னார் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை மன்னாரில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் நகர சபையின் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) மன்னார் மாவட்ட செயற்பாட்டுக்குழு கூட்டம் நேற்று மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ஏ.யூட் குரூஸ், பீற்றர் மடுத்தீன் உட்பட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.
குறித்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக கட்சிகளின் ஒன்றினைவு தொடர்பாகவும், கூட்டாக மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சகல விதமான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அரசிற்கு எதிராக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னெடுக்கின்ற சகல போராட்டங்களுக்கும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் எதிர்வரும் தேர்தல்களின் போது கட்சி தனியாக அல்லது கூட்டாக போட்டியிடுவது தொடர்பாக ஆராயப்பட்டதோடு, கட்சியின் ஏனைய உறுப்பினர்களையும் அழைத்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்வது என முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



