இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான விசாரணை இன்று நிறைவு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை இன்று நிறைவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
உறுப்பினர்களின் விபரங்களை வழங்கிய நாடாளுமன்ற செயலாளர்
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பிறந்த தினம், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அண்மையில் நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியது.
இந்த விபரங்கள் கிடைத்த பின்னர், ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை இன்று நிறைவு செய்ய முடியும் என நம்புவதாக திணைக்களம் கூறியுள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை மூடிமறைக்க முயற்சி
எவ்வாறாயினும் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரட்டை குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை மூடி மறைக்கும் முயற்சிகள் நடப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
