இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் முதல் வெற்றி: ஆராய்ச்சியின் அடுத்த கட்டம்
இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான புதிய வழி முறையை சீனாவில் (China) உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடித்துள்ளனர்.
இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனினும், இதுவரை எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.
இந்த ஆராய்ச்சிகள் தோல்வியடைய ஒரு முக்கிய காரணம், இறந்தவரின் மூளையை பாதுகாக்க முடியாமையே ஆகும்.
புதிய கண்டுபிடிப்பு
இந்நிலையில், சீனாவில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கிரையோஜெனிக் உறைவிப்பான் அமைப்பு, இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நம்பிக்கைக்கு புதிய பாதையை வகுத்துள்ளது.
சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு கிரையோஜெனிக் உறைவிப்பான் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த உறைவிப்பானானது மிகக் குறைந்த வெப்பநிலையில் மூளை திசுக்களை உறைய வைப்பதுடன் அதை மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
MEDY என்று பெயரிடப்பட்ட இந்த மருந்தை உறைவிப்பானில் இருந்து வெளியே எடுத்த பிறகு மூளையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படாமல், முன்பு போலவே அனைத்து செயல்பாடுகளும் நடந்ததாக ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் சிசெங் ஷோ (Zhicheng Shao) கூறியுள்ளார்.
MEDY உறைவிப்பான்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறந்தவரின் அனைத்து உறுப்புகளையும் குறிப்பிட்ட வெப்பநிலையுடன் கிரையோஜெனிக் உறைவிப்பான்களில் வைப்பதன் மூலம் பல ஆண்டுகள் பாதுகாக்க முடியும். எனினும், மூளையில் 80 சதவீதம் நீர் இருப்பதன் காரணமாக அவ்வாறு பாதுகாக்க முடியாது.
மூளை சாதாரண உடல் உறைவிப்பான்களில் சேமிக்கப்பட்டால், மூளை திசுக்களில் உள்ள நீர் உறைந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும். வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, மூளை அதன் முந்தைய செயல்பாடுகளைச் செய்யாது. இதற்கு ஒரு சிறப்பு கிரையோஜெனிக் உறைவிப்பான் தேவைப்பட்டது.
அந்தவகையில், Methylcellulose, Mthylene glycol, DMSO and Y27632 ஆகிய சிறப்பு இரசாயனங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் MEDY என பெயரிடப்பட்டுள்ளதுடன் இவை மூளையைப் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது” என கூறியுள்ளார்.
இந்த ஆராய்ச்சி மூலம், மூளையை பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம் கிடைத்துள்ளதுடன் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நம்பிக்கைக்கு பலம் சேர்த்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
