இலங்கையில் நிகழ்ந்த அநீதிக்கு எதிராக ஜெனிவாவில் ஒலித்த பெண்ணின் குரல்

Government Of Sri Lanka Sri Lankan political crisis Sri Lanka Government OHCHR
By Chandramathi Sep 22, 2022 10:01 PM GMT
Report

காணாமல்போன கணவருக்காக சளைக்காமல் போராடியதற்காக சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், இலங்கை குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்காத நாடு என சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்துள்ளார்.

"இன்று நீங்கள் காணும் எனது மொட்டையடிக்கப்பட்ட தலை மற்றும் கறுப்பு ஆடைகள், நான் குற்றவியல் சக்திகளுக்கு தண்டனை கிடைக்காத, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன்.” என்ற செய்தியை உங்களுக்கு வழங்குகிறது.

பன்னிரெண்டு வருடங்களுக்கும் மேலாக நீதிக்காக போராடி வரும் சந்தியா எக்னலிகொட, ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றும் போதே சிங்கள மொழியில் இதனை தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவுக்கு நீதி கிடைக்க ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் முடிவில்லாத போரில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும், வடக்கில் தாய்மார்களின் முடிவற்ற போராட்டம் குறித்து குரல் எழுப்பியதாகவும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

சந்தியா எக்னெலிகொடவின் கருத்து

இலங்கையில் நிகழ்ந்த அநீதிக்கு எதிராக ஜெனிவாவில் ஒலித்த பெண்ணின் குரல் | Introduction To Sri Lanka In Geneva

“என்னை போன்று காணாமல் போன தமது உறவுகளை தேடி வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தாய்மார்கள் நாடு பூராகவும் உள்ளனர். வடக்கில் தமிழ் தாய்மார்கள் போராடி வருகின்றனர். என்னை போலவே, அவர்களும் பொலிஸ் போன்ற பல அரசு நிறுவனங்களுடன் மோதுகிறார்கள், ”என சந்தியா வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா குழுவின் 23ஆவது அமர்வில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.

கடந்த நான்கு தசாப்தங்களில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், எந்தவொரு ஆணைக்குழுவும் காணாமல் போனவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ நீதி வழங்கவில்லை என்பதை அவர் சர்வதேச சமூகத்திற்கு நினைவுபடுத்தினார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான சந்தியா எக்னெலிகொட, பாதிக்கப்பட்டவர்கள் உண்மையையும் நீதியையும் அடைய நம்பக்கூடிய ஒரு சட்டப் பொறிமுறையை பெறுவதற்கு ஐ.நா தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார்.

விருது வழங்கல்

இலங்கையில் நிகழ்ந்த அநீதிக்கு எதிராக ஜெனிவாவில் ஒலித்த பெண்ணின் குரல் | Introduction To Sri Lanka In Geneva

2017 ஆம் ஆண்டில், இலங்கையில் நடந்த போரிலும் முந்தைய கிளர்ச்சிகளிலும் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் உறவினர்களின் அடையாளமாக மாறிய ஒரு பெண்ணாக சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்காவின் சர்வதேச தைரியத்திற்கான விருதை அளித்துள்ளது.

காணாமல் போன தமது கணவர் பிரகித் எக்னலிகொட குறித்த உண்மையை வெளிக்கொண்டுவர, அதிகாரிகளின் தடைகளையும் மீறி எண்பது தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் சென்று சந்தியா காட்டிய தைரியமே அவருக்கு இந்த விருது கிடைத்தமைக்கு காரணம் என அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஏ ஷெனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.         

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US