கடவுச்சீட்டு விநியோகத்திற்கான விசேட வேலைத்திட்டம் அறிமுகம்
கொவிட் வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம், மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய பிராந்திய அலுவலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவானோருக்கு மாத்திரமே சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, கட்டாய தேவை உள்ளவர்கள், தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள காரியாலயத்தை, கீழ்வரும் இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு, நேரத்தை முன்பதிவு செய்துகொண்டதன் பின்னர் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள தலைமை காரியாலயம் – 070 -710 10 60 அல்லது 070 – 710 10 70
மாத்தறை பிராந்திய அலுவலகம் – 041 – 54 12 212 / 041 51 04 444
கண்டி பிராந்திய அலுவலகம் – 081 – 56 24 509 / 081 – 56 24 470
வவுனியா பிராந்திய அலுவலகம் – 025 – 56 76 344 / 025 – 56 76 345
குருணாகல் பிராந்திய அலுவலகம் – 037 – 55 50 562 / 037 – 55 50 563 மேற்படி அலுவலகங்களினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தீர்மானமானது,
அரசாங்கத்தினால் அமுலாக்கப்படும் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு அமைய மீள் திருத்தம் செய்யப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
