தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனை கட்டாயமாக்குவது குறித்த சட்டங்கள் அறிமுகம்
கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதனை கட்டாயமாக்குவது குறித்த சட்டங்கள் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களை கண்டறியும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் கணக்கெடுப்பு நடாத்தப்படுவதாகவும், சட்ட உருவாக்கத்திற்கான அடிப்படையாகவே இந்த கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடாத்துமாறு ஜனாதிபதி அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார்.
பல்வேறு காரணிகளினால் சிலர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதனை கட்டாயமாக்கும் வகையில் ஒர் சட்டத்தை அறிமுகம் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan