உலகின் முதல் பனையோலை இந்திய தேசியக்கொடி அறிமுகம்
சென்னை - சோராஞ்சேரி பூந்தமல்லி ஃபார்ம்ஸ் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பனைமர பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உலக சாதனை நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, தமிழ் கொடி என்பவரால் உருவாக்கப்பட்ட, உலகின் முதல் பனையோலை இந்திய தேசியக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்,மேலும் மரக்கன்றுகள் நடும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்களான முன்னாள் டிஜிபி பாலச்சந்திரன் ஐபிஎஸ், தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
சுதேசி இயக்க தலைவர் குமரி நம்பி உலகின் முதல் பனையோலை தேசிய கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
லிங்கன் புக் ஆப்ஃ ரெக்காட்ஸ், தன்னிச்சை தன்னார்வலர்கள் குழு, யுவாதி விகாஸ் அறக்கட்டளையினர், கோமாதா சேவா சமீதி, பனையாழி, அறப்பயிர் இயக்கத்தினர் என பல்வேறு அமைப்பினர்கள் இணை ஒருங்கிணைப்பாளர்களாக பங்கு பெற்றுள்ளனர்.
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri