யாழில் பொலிஸ் உத்தியோகத்தரை மிரட்டிய மொட்டு கட்சி உறுப்பினர்
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் தலைமைப்பீட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணிப் பிரச்சனை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், யாழ் மாவட்ட அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறும் அழைத்துள்ளார்.
இடமாற்றம் செய்வேன் என்று அச்சுறுத்தல்
அத்துடன், விசாரணைக்கு வருகை தராத பட்சத்தில் வட மாகாண மூத்த பொலிஸ் அதிகாரியை கொண்டு இடமாற்றம் செய்வேன் என்று கடும் தொணியில் அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தனது கடமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.




