மாணவியொருவருக்கு நேர்ந்த கதி: யாழில் இரு இளைஞர்கள் கைது
யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் வீடியோ உரையாடலைப் பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி, அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியுடன் இளைஞர் ஒருவர் வீடியோ அழைப்பின் மூலம் சில மாதங்களுக்கு முன்னர் உரையாடியுள்ளார்.
இதன்போது அந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளார்.

வீடியோ பதிவு
மாணவியுடனான உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞருக்கும் குறித்த இளைஞர் அனுப்பியுள்ளார்.
அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
மாணவி நேர்ந்த கதி
அதேவேளை, இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞரும், அதனைப் பயன்படுத்தி மாணவியைப்
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞரும் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam