பொலிஸ் சேவைக்கு உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பிற்கான நேர்முகத்தேர்வு
இலங்கை பொலிஸ் சேவைக்கு (உப பொலிஸ் பரிசோதகர்) ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (06) காலை 9 மணி முதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த இறுதி நேர்முகத் தேர்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலாரும் என நூற்றுக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே அவர்களிற்கான நேர்முகத்தேர்வுகள் கடந்தவருடம் இடம்பெற்று பின்னர் உடற்தகுதி காண் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது.
இன்றைய இறுதி நேர்முகத் தேர்வில் 45 ஆண், பெண் உப பொலிஸ் பரிசோதகர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், வடமாகாணத்தைச் சேர்ந்த ஆண், பெண் பரீட்சார்த்திகள் என இருபாலரும் கலந்து கொண்டிருந்தனர்.








