மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான நேர்முக பரீட்சை (Photos)
நீதி அமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழவினால் பிரதேச செயலகம் தோரும் மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான நேர்முக பரீட்சைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிநான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபையின் பதவி வறிதாகுகின்ற உறுப்பினர்களுக்கு பதிலாக மீண்டும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம் பெற்ற நேர்முக பரீட்சையில் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஆஸாத் (M.I.Azad) மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முப்பத்தைந்து பேர் இந் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டதாக பிரதேச செயலாளர் வீ. தவராஜா (V.Thavaraja) தெரிவித்தார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |












தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
