கொக்கட்டிச்சோலையில் கட்டுத்துப்பாக்கியுடன் கைதான நபருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபரை 14 நாட்களுக்குத் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணல்பிட்டி பகுதியில் வைத்து கட்டுத் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீதியால் பயணித்த முச்சக்கர வண்டியினை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த கட்டுத்துப்பாக்கியுடன், அம்பிளாந்துரையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்த இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளுக்காக கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (22) குறித்த சந்தேக நபரை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே குறித்த சந்தேகநபரை 14 நாட்களுக்குத் தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
