இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட பணம்! தமக்கு கிடைக்கவில்லை என்கிறது அமெரிக்க தரப்பு - விசாரணை தீவிரம்
செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 625,000 அமெரிக்க டொலர் பணம் தமக்குக் கிடைக்கவில்லை என அமெரிக்க தரப்பு அறிவித்துள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.பி.சத்குமார தெரிவித்துள்ளார்.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் பணமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தபால் திணைக்களம் பணத்தைச் செலுத்தியுள்ள போதிலும், அந்த நிதி தமக்குக் கிடைக்கவில்லை என அமெரிக்க அஞ்சல் சேவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து மேலதிக விளக்கங்களை திணைக்களம் கோரியுள்ளது.
சந்தேகம்
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இது ஒரு இணைய மோசடி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டதாக மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், குறித்த வங்கிக் கணக்கு தற்போது செயலிழந்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam