பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான பெயர் குறிகள்
இராணுவ சீருடையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய முப்படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்களது சேவை அடையாளங்களுடன் சர்வதேச இராணுவத் தரங்களுக்கு இணையாக இலகு ரக உலோகத்தால் செய்யப்பட்ட புதிய தனித்துவமான பெயர் குறிகளை பயன்படுத்தப்படவுள்ளன.
இதன் அங்குரார்பண நிகழ்வு நேற்றையதினம் இராணுவ தலைமையக தளபதி அலுவலகத்தில் இராணுவ தளபதியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தின் அங்கீகாரத்தை மேலும் அதிகரிக்கவும் ஒப்பிடமுடியாத சேவைக்கு கூடுதல் மதிப்பைப் ஏற்படுத்தவும் இராணுவ வரலாற்றின் முதன் முறையாக இவ்வகையான புதிய பெயர் குறி இராணுவ வீரர்களுக்கு சம்பிரதாய பூர்வமாக தளபதி அணிவித்துள்ளார்.
புதிய பெயர் குறியில் அதிகாரவாணை அற்ற அதிகாரி 1 குடும்பப்பெயருக்கு முன் முதல் எழுத்துக்களும் அதிகாரவாணை அற்ற அதிகாரி 2 மற்றும் அதற்கு கீழுள்ள நிலைகளுக்கு குடும்பப் பெயருக்குப் பின் முதலெழுத்துக்களையும் கொண்டுள்ளது.
தளபதியின் உத்தரவின் பேரில், 9 செ.மீ நீளமும் 2 செ.மீ அகலமும் கொண்டதும் சேவைக்கான நிறத்தினை பயன்படுத்தியும் புதிய பெயர் குறியினை அறிமுகப்படுத்த இராணுவ ஆலோசனை சபை அங்கிகாரம் அளித்ததுள்ளது.
அத்தோடு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி கடற்படை மற்றும் விமானப் படையின் அனைத்து நிலைகளுக்கும் இந்த புதிய பெயர் குறியினை அணியத் தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.







பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
