“சர்வதேச சவாலுக்கு முன் சரண்” கோட்டாவின் அரசாங்கம், சவாலில் தளர்வை அறிவித்துள்ளது
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம், சர்வதேசத்துக்கு விடுத்து வந்த சவால், தளர்வுக் கண்டுள்ளமையை உணரமுடிகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு கூட்டப்படவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தத்தை முன்வைக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி இதனை சுட்டிக்காட்டுகிறது.
பயங்கரவாதத் தடுப்பு திருத்தச் சட்டமூலம்’ என்ற புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு பின்னர் சட்டமாக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும், ஐரோப்பிய நாடாளுமன்றமும் தொடர்ந்தும் கோரி வருகின்ற நிலையிலேயே இந்த திருத்தத்தை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது.
முன்னதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை இணை அனுசரணை நாடாக இருந்து முன்வைத்திருந்த யோசனையில் இருந்து, கோட்டாபயவின் அரசாங்கம் விலகியிருந்தது.
இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தன.
எனினும் இது முன்னர் ஆட்சியை தக்கவைப்பதற்கும், தம்மை விரும்பும் சிங்கள மக்களை கவர்ந்திழுக்கவும் உதவியது.
ஆனால் நாடு இன்று சர்வதேசத்தின் உதவிகள் இல்லாமல், முன்னேற முடியாது என்று நிலை ஏற்பட்டுள்ளமையை அடுத்து, கோட்டாபயவின் அரசாங்கம், உள்நாட்டில் செய்வதைப்போன்று தமது கொள்கையை திரும்பப்பெற்றுள்ளது
என்றே கூறலாம். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வின் போது, தமது தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கையின் முன்னேற்றத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 28 வது பிரிவின்படி எந்தவொருவரையும் தடுத்து வைப்பது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழு தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும்.
அத்தகைய இடத்திற்குச் செல்லும் ஒரு நீதிவான், சந்தேகத்துக்குரியரை நேரில் பார்ப்பார். இதன்போது அவரது நல்வாழ்வு, நலன் மற்றும் அத்தகைய தடுப்பு இடத்தில் அவர் வைத்திருக்கும் நிலைமைகள் ஆகியவற்றைக் கவனிப்பார் அத்துடன் சந்தேகத்துக்குரியவர் செய்யும் எந்தவொரு முறைப்பாட்டையும் அவர் பதிவு செய்ய வேண்டும்.
சந்தேகத்துக்குரியவர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அவரை நீதித்துறை வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நீதவான் பணிக்க வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம், 1979 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது முக்கியமாகப் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகிக்கப்படுவோரை கையாள்வதற்காக அது பயன்படுத்தப்பட்டது.


950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
