சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட தகவல்
அனைத்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிக விரைவில் இலங்கைக்கு கிடைக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஏனைய நாடுகளின் நம்பகத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மை
இதேவேளை, இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் கடினமான சீர்திருத்தங்கள் தொடர்பில் கருத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஒரு நாடாக செயற்படுவது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச கடன் வழங்குவோரின் நம்பிக்கையான தீர்மானங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,
இலங்கை மிக விரைவில் ஸ்திரமான பொருளாதாரத்தை அடையும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam