கடன் மறுசீரமைப்பு தொடர்பான 3வது சுற்று பேச்சுவார்த்தைகள்! செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான மூன்றாவது சுற்று கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வெளிப்படையான கடன் மறுசீரமைப்பு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் தொகையை வழங்குவதில்லை என சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் தீர்மானிக்கவில்லை.
டிசம்பர் மாதத்தில் குறித்த கடன் தொகையை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே தாமதத்துக்கான காரணம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,