இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவதானம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் என்ற பொதுமைப்படுத்தப்பட்ட விருப்பத்தேர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ள தனது கடமைகளில் இருந்து இலங்கை மிகவும் கீழ்நிலையில் உள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2019 முதல் இலங்கையின் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சுருங்குகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன, இது அவநம்பிக்கையான பொருளாதார காலங்களில் முக்கிய வருமானத்தை இலங்கைக்கு வழங்கி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான விருப்பத்தேர்வுகள் பிளஸ் திட்டமே இதற்கு முக்கிய காரணமாகும். எனினும் ஐரோப்பிய ஒன்றியம், தமது அண்மையில் புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கை அரசாங்கம் இந்த இலக்கை விட மிகவும் பின்னோக்கியே இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை மீறல்கள்
அந்த அறிக்கையின்படி, இலங்கையில் மனித உரிமைகளுக்கான இரண்டு பிரகாசமான புள்ளிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. மக்கள் ஒன்று கூடல் மற்றும் சிவில் சமூகத்தின் எதிர்ப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றது முதல் பாரிய அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது.
இது, இலங்கையின் பொருளாதார, ஆளுகை மற்றும் மனித உரிமைகள் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு உதவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைக்கு இது சவாலான விடயமாகும்.
அத்துடன் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நீக்கம் தொடர்பில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முக்கிய உறுதிமொழியை - அரசாங்கம் இன்னும் ரத்து செய்யவில்லை என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கு பதிலாக, அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை முன்மொழிந்துள்ளபோதும், இது உரிமைகள் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |