அரசியல்வாதிகளுக்காக வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் இலங்கையர்கள் - விமான நிலையத்தில் கசிந்த உண்மை
இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படவில்லை என விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக வாக்களிக்க மக்கள் நாடு திரும்புகிறார்கள் என தகவல்கள் வெளியாகின.
எனினும் அந்தளவு அதிகரிப்பான பயணிகள் இதுவரை வரவில்லை என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விமானம்
தமது நிறுவனத்தின் மேலதிக விமானங்களை இலங்கைக்கு மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு விமான நிறுவனமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல தனியார் விமானங்கள் இலங்கை ஊடாக பயணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதைத் தவிர வேறு எந்த கூடுதல் விமானங்களும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரியதொரு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan