யாழில் சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு நிகழ்வு (Photos)
சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சினால் விசேட நலநிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (19.12.2023) மதியம் 2 மணியளவில் நடைபெற்றுள்ளது.
உலர் உணவு பொதி
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவும் தொடர்ச்சியாக சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்பொழுது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உயரதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








