யாழில் வெகு சிறப்பாக நடைபெற்ற 103வது சர்வதேச கூட்டுறவு தின விழா
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை நடத்திய 103வது சர்வதேச கூட்டுறவு தின விழாவானது இன்றையதினம் யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது.
இடம்பெற்ற நிகழ்வு
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமை உரை, போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களின் பேச்சுகள், கூட்டுறவாளர் உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதன்பின்னர் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றியட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
பின்னர் மேற்படி போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய கூட்டுறவு நிறுவனங்களின் அங்கத்தவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 103வது கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மைதான நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றியட்டியவர்களுக்கான பரிசில்களும், சிங்களக் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சிறந்த ஊழியர்களுக்கு கௌரவிப்பு
தொடர்ச்சியாக கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த ஊழியர்களுக்கு கௌரவிப்பு இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதனும், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் கி.சந்திரசேகரனும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இதில் கூட்டுறவு சபையினர், கூட்டுறவு பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
