யாழில் இடம்பெறவுள்ள சர்வதேச புத்தகத் திருவிழா
2024ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள்
இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தக வெளியீடுகள்
இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பல புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன ஆனால் யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
புத்தக திருவிழா இடம்பெறும் தினங்களில் புத்தக வெளியீடுகள், அறிமுக நிகழ்வுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடமாகாணத்தை சேர்ந்த அனைத்து மக்களும் இந்த நிகழ்வில் பங்குபற்ற கூடியவாறு அமையப்பெற்றுள்ளது.
இக் கண்காட்சி முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும் என்பதோடு 40 காட்சி கூடங்கள்
அமைக்கப்படும். அவற்றில் உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை
காட்சிப்படுத்தவுள்ளோம் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |