இலங்கைக்கான பயணங்களை குறைத்துள்ள சர்வதேச விமான சேவை நிறுவனங்கள்
இலங்கைக்கு விமான பயணங்களை மேற்கொண்டு வரும் சர்வதேச விமான நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக குறைந்துள்ளது என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று நோய் நிலைமைக்கு முன்னர் 41 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை நடத்தி வந்தன.
எனினும் தற்போது பல்வேறு காரணங்களின் அடிப்படையில், சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை குறைத்துக்கொண்டுள்ளன என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச கூறியுள்ளார்.
சேவைகளை நிறுத்தியுள்ள கேத்தே பசுபிக்

அதேவேளை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் அழைத்து வரும் கேத்தே பசுபிக் விமான சேவை நிறுவனம் சேவையை நிறுத்தியுள்ளதால், விமான பயண தொழிலுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புள்ளவிபரங்களுக்கு அமைய 2020 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் வருமானம் 216 மில்லியன் என்பதுடன் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைவான வருமானம் எனக்கூறப்படுகிறது.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam